கெடா மாடு மாதிரி இருக்கும் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று சொல்லும் அளவுக்குத்தான் திமுக-வினருக்கு அறிவு உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வானதி சீனிவாசன், அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ஏங்க, கெடா மாடு மாதிரி இருக்கவர ஆட்டுக்குட்டின்னு சொல்ற அளவுக்குதாங்க திமுகவினருக்கு அறிவு - திமுகவினர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என கிண்டல் செய்வதற்கு வானதி சீனிவாசன் பதிலடி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

உண்மை அறிவோம்:

அண்ணாமலைக்கு சாதகமாகப் பேசுவது போன்று அவரை வானதி சீனிவாசன் திட்டியது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போலவே உள்ளதால் பலரும் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய நாமும் ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஏதும் நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, ஏப்ரல் 3, 2024 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது.

ஆனால் அதில், "திமுகவினருக்கு என் மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களைச் செய்வார்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை" என்று இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

புதிய தலைமுறை வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவானது. இதை உறுதிசெய்துகொள்ள புதிய தலைமுறை நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தார்.

மேலும், சிறிது நேரத்தில் புதியதலைமுறை இணையதளத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று பதிவிட்டிருப்பதாக நமக்குத் தகவல் கொடுத்தார்.

இதன் மூலம் அண்ணாமலையைக் கெட மாடு என்று வானதி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலையை கெடா மாடு போல இருக்கிறார் என்று வானதி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலையை ‘கெடா மாடு’ என்று கூறினாரா வானதி சீனிவாசன்?

Fact Check By: Chendur Pandian

Result: False