‘’என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது - அறியாத வயதில் நான் செய்த தவறு அதை திமுக தான் பெரிதாக்கியது; என் அந்தரங்க படத்தை வெளியிட்டு அதை வைரல் ஆக்கிய திமுகவுடன் இனி ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது – பாரிவேந்தர்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என தகவல் தேடியபோது, ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்று புதிய தலைமுறை ஆசிரியர் குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அடுத்தப்படியாக, கடந்த 2022ம் ஆண்டு இதே டெம்ப்ளேட்டில் அவர்கள் வெளியிட்ட மற்றொரு நியூஸ் கார்டின் லிங்கையும் நமக்கு கொடுத்தனர்.

இதனை எடுத்து எடிட் செய்துதான், ‘என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது’ என்று பாரிவேந்தர் கூறியதாக, வதந்தி பரப்புகிறார்கள்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Altered