
‘‘திமுக கொத்தடிமைப் படிவத்தில் கையெழுத்திட்ட ஓபிஎஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கொத்தடிமை படிவத்தில் கையெழுத்திட்டார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இதன்படி, புதிய தலைமுறை ஆசிரியர் குழுவில் கேட்டபோது, ‘’ திமுக கொத்தடிமை படிவத்தில் கையெழுத்திட்டார் ஓ.பன்னீர்செல்வம், என்று நாங்கள் எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை,’’ என்று மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டின் லிங்க் நமக்கு கிடைத்தது. அதில், ‘’ திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார் ஓ.பன்னீர்செல்வம்,’’ என்றே எழுதப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:திமுக கொத்தடிமைப் படிவத்தில் கையெழுத்திட்ட ஓபிஎஸ் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


