கோவையில் இளைஞரின் ஆண் உறுப்பைக் கடித்த பாஜக நிர்வாகி கைது என்று புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதியதலைமுறை வெளியிட்டது போன்ற ட்வீட்டை ஃபேஸ்புக்கில் 30 ஜனவரி 2024 அன்று பதிவிட்டுள்ளனர். அதில், "கோவை: மதுபோதையில் இளைஞரின் குஞ்சைக் கடித்துக் காயம் ஏற்படுத்திய பாஜக நிர்வாகி - நடந்தது என்ன?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "மது போதையா? இல்லை சாவார்க்கர் மாதிரி ஓரினச் சேர்க்கையில் காம போதை தலைக்கேறி நடந்ததா? அந்த வானதிக்கே வெளிச்சம்..!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் "பல்லு படாம” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக நிர்வாகி இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பை கடித்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மையில் இப்படி ஒரு செய்தி சமீபத்தில் வெளியானதாக நினைவில் இல்லை. எனவே, இந்த செய்தியை அப்படியே கூகுள் தேடலில் தட்டச்சு செய்து தேடினோம். ஆண் உறுப்பை கடித்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே போல், புதிய தலைமுறை இணையதளத்திலும் இப்படி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அதிலும் நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

எனவே, இந்த ட்வீட் ஸ்கிரீன்ஷாட்டை புதிய தலைமுறை ஆசிரியர் குழு நிர்வாகிக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அதற்கு அவர் "இது யாரோ எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை" என்றார். மேலும், புதிய தலைமுறையில் வெளியான வேறு ஒரு செய்தியின் எக்ஸ் தள (ட்வீட்) பதிவை நமக்கு அனுப்பினார்.

அதில், "கோவை: மதுபோதையில் இளைஞரின் நெஞ்சைக் கடித்துக் காயம் ஏற்படுத்திய திமுக நிர்வாகி - நடந்தது என்ன? #Coimbatore #dmk" என்று இருந்தது. "இந்த ட்விட்டை எடிட் செய்திருக்கலாம்" என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.

நம்முடைய ஆய்வில், ஆண் உறுப்பை கடித்த பாஜக நிர்வாகி என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இப்படி எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்று புதிய தலைமுறை தரப்பில் நம்மிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இளைஞரின் நெஞ்சைக் கடித்துக் காயம் ஏற்படுத்திய திமுக நிர்வாகி என்று வெளியான செய்தி நமக்கு கிடைத்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இளைஞரின் ஆண் உறுப்பைக் கடித்த பாஜக நிர்வாகி என்று புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக நிர்வாகியின் அநாகரீக செயல் என்று பரவும் ட்வீட் ஸ்கிரீன்ஷாட் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered