
‘’இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரேடியோ கார்டன் செயலி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போல, Radio Garden Live என்பது ஆன்லைன் வழியே, உலக வரைபடம் கொண்டிருக்கும். அதில், உலகம் முழுக்க எந்தெந்த பகுதிகளில் வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் வகையில் பச்சை நிறத்தில் புள்ளிகள் இருக்கும். அதனை கிளிக் செய்தால், அந்த வானொலியை அப்படியே கேட்க முடியும். எனினும், இதனை இஸ்ரோ வடிவமைக்கவில்லை.

இதனை வடிவமைத்தவர் ஜோனாதன் புக்கி என்பவர் ஆவார். இவருடன் Netherlands Institute for Sound and Vision, Martin Luther University of Halle-Wittenberg’s Golo Follmer ஆகியோரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
எனவே, முழுக்க முழுக்க ஐரோப்பிய நிபுணர்களைக் கொண்டு ஐரோப்பிய நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப சேவையை, சிலர் எடுத்து, வேண்டுமென்றே ‘இஸ்ரோ வடிவமைத்த அற்புதம், இந்தியாவின் சாதனை,’ என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:இஸ்ரோ வடிவமைத்த ரேடியோ கார்டன் செயலி என்று பகிரப்படும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
