‘’ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி விழுந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில் பாஜக.,வின் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி விழுந்தாரா என்று தகவல் தேடினோம். ஆனால், இவ்வாறு எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.

மேலும், இந்த வீடியோ ஒடிசா மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஒன்று எனவும் தெரியவந்தது. இதன்படி, பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பூபிந்தர் சிங் கடந்த 2023 டிசம்பர் 25 அன்று ஒடிசாவில் உள்ள நார்லா (Narla) என்ற இடத்தில் கிரிக்கெட் போட்டிய தொடங்கி வைத்தார். அப்போது, அவர் விளையாட முயன்றபோது, தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்துள்ளார்.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Orissa Diary Link l Deccan Herald Link l The Week Link

பஜன் லால் மற்றும் பூபிந்தர் ஆகியோரின் புகைப்படங்களை ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி விழுந்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False