‘சிக்கன் சாப்பிடும்போது சிக்கிய பண்டிட்’ என்று பகிரப்படும் வீடியோ உண்மையானதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ சிக்கன் சாப்பிடும்போது சிக்கிய பண்டிட்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ சிக்கன் சாப்பிடும் பண்டிட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என தெரியவந்தது. ஆம், Sujeet pandey என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் முதன்முறையாக இந்த வீடியோ சில நாட்கள் முன்பாக பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம். 

மேலும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்று நிறைய சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பல்வேறு தலைப்புகளின்கீழ் பகிரப்பட்டிருந்தன. 

மேலும், இந்த ஃபேஸ்புக் பக்கத்திற்குச் சொந்தக்காரர் தன்னை ஒரு நடிகர் என்றும் சுய விவர குறிப்பில் எழுதியுள்ளார். 

எனவே, ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டுள்ள சித்தரித்த வீடியோ காட்சியை எடுத்து, உண்மையானது போல குறிப்பிட்டு, பண்டிட் சிக்கன் சாப்பிடுவதாகக் கூறி சமூக வலைதளங்களில் பலரும் வதந்தி பரப்புவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘சிக்கன் சாப்பிடும்போது சிக்கிய பண்டிட்’ என்று பகிரப்படும் வீடியோ உண்மையானதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING

Leave a Reply