FactCheck: பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் – ரஜினிகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்கள், மக்கள் என யாரையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது, சட்டமன்ற தேர்தல் நேரம் என்பதால், நாள்தோறும் சமூக வலைதளங்களில் புதுப்புது தகவல்கள் பகிரப்படுவது வழக்கமாக உள்ளது. இதுபற்றி நாமும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வருகிறோம். இந்நிலையில்தான் மேற்கண்ட நியூஸ் கார்டும் பரவலாக பகிரப்படுவதைக் கண்டோம்.

ரஜினிகாந்த் ஏற்கனவே கட்சி தொடங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், உடல்நலம் காரணமாக, அந்த முயற்சியை முற்றிலும் கைவிடுவதாக, அறிவித்தார்.

HindustanTimes LinkTheQuint Link

அதன்பிறகு, அவர் எந்த அரசியல் கட்சி பற்றியும் தற்போதைய சூழலில் இதுவரை கருத்து தெரிவிக்கவும் இல்லை. இருந்தும், இதனைப் பலரும் பகிர்வதால், உண்மையா என்று சந்தேகத்தின் பேரில், News 7 Tamil ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா சாரங்கராஜ் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

குறிப்பிட்ட தகவலை பார்வையிட்ட அவர், ‘’இது வழக்கம்போல எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி. நாங்கள் இப்படியான நியூஸ் கார்டு டெம்ப்ளேட்டை சமீப காலமாக பயன்படுத்துவதில்லை,’’ என்று குறிப்பிட்டார்.

எனவே, ரஜினிகாந்த் பெயரில் உருவாக்கப்பட்ட போலிச் செய்தி இது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False