மோடியை வரவேற்க தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை திமுக அரசு வழங்கியதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’மோடியை வரவேற்பதற்காக, தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை அரசு வழங்கியுள்ளது,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி கடந்த வாரம் (மே 26, 2022) தமிழ்நாட்டிற்கு வந்தார். இதன்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

TOI Link I India TV News Link

இந்த சூழலில், மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடை வழங்கப்பட்டதாக, தகவல் பகிரப்படுகிறது. ஆனால், இதற்கும் மோடியின் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த புகைப்படம் மோடி வருவதற்கும் முன்பிருந்தே சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும்.

மே 26, 2022 அன்றுதான் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தார். ஆனால், அதற்கு முன்பிருந்தே இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதுதொடர்பாக, சமூக நல ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூட பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

இந்த புகைப்படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும்போது, PFI Tirumala TMT Bars என்றும், Rotary Club என்றும் சில லோகோ, பெயர்களை காண முடிகிறது.

ஒருவேளை இது ஏதேனும் தனியார் ஸ்பான்சராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், தகவல் தேடியபோது இது ஒரு தனியார் நிறுவனம் என தெரியவந்தது.

இதுபற்றி கூடுதல் விவரம் அறிய Avadi Police Commissionerate தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, ‘’இந்த புகைப்படத்திற்கும், மோடியின் தமிழ்நாடு வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சில நாட்கள் முன்பாக, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பாக, குறிப்பிட்ட நிழற்குடைகள் போக்குவரத்து போலீசாருக்கு அன்பளிப்பாக தரப்பட்டன. ஆனால், அவற்றின் நிறம் காவியாக இருந்ததால், சர்ச்சை எழவே, அவற்றை பயன்படுத்தாமல் நிறுத்திவிட்டோம். இதுதவிர, இந்த புகைப்படத்தை எங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்தும் அகற்றிவிட்டோம்,’’ என்று தெரிவித்தனர்.

எனவே, தனியார் நிறுவனம் அன்பளிப்பாக, ஸ்பான்ஷர் முறையில் இத்தகைய நிழற்குடைகளை வழங்கியதாகவும், அதனை பின்னர் போலீசார் பயன்படுத்த மறுத்துவிட்டதாகவும் சந்தேகமின்றி தெரியவருகிறது. மேலும், இதற்கும், மோடியின் தமிழ்நாடு வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மோடியை வரவேற்க தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை திமுக அரசு வழங்கியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context