FactCheck: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

இந்தியா சமூகம் தமிழ்நாடு

‘’அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன்- ரஜினிகாந்த்,’’ எனக் கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த நியூஸ் கார்டை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டில், 12 ஜூலை 2021 என தேதியிடப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தேதியில் ரஜினிகாந்த் ஏதேனும் ஊடகங்களில் பேசினாரா என தகவல் தேடினோம். அப்போது, ‘’இனி எந்த காலத்திலும் அரசியலுக்கு வரப் போவதில்லை. இதனை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சி தொடங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை நிரந்தரமாகக் கலைக்கிறேன்,’’ என்று ஜூலை 12, 2021 அன்று ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி, அறிவித்தார்.

BBC Tamil Link

எனவே, இதே தேதியில் புதிய தலைமுறை ஊடகம் ரஜினிகாந்த் பற்றி மேற்கண்ட வகையில் செய்தி வெளியிட்டதா என அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடினோம். அப்போது, மேற்கண்ட நியூஸ் கார்டு எதுவும் அவர்கள் வெளியிடவில்லை என தெரியவந்தது.

குறிப்பிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டை கீழே மீண்டும் ஒருமுறை இணைத்துள்ளோம்.

இதன்படி, அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது குறித்து கேள்விகள் உள்ளது, அதுபற்றி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விவாதிக்கிறேன், என்றுதான் ரஜினிகாந்த் பேசியுள்ளார். மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றி விவாதிக்கிறேன் என்று எங்கேயும் அவர் கூறவில்லை.

உண்மையான நியூஸ் கார்டையும், நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டையும் ஒப்பிட்டு, கீழே பகிர்ந்துள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •