
‘’குஜராத்தில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனை என்று கூறி பெண்டகன் கட்டிடத்தின் புகைப்படத்தை பகிரும் சங்கிகள்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டரில் தகவல் தேடியபோது, அங்கேயும் இதனை உண்மை என நம்பி, சிலர் ஷேர் செய்வதைக் கண்டோம்.
இதே ஸ்கிரின்ஷாட்டை விமர்சித்து வெளியிடப்பட்ட மற்றொரு மீமையும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டை நன்கு கவனித்தால், முதலில், ஒருவர் பகிர்ந்த ட்வீட்டை ஸ்கிரின்ஷாட் எடுத்து, அதனை உண்மை என நம்பி விமர்சித்து, மற்றொருவர் ட்வீட் பகிர்ந்திருப்பதாக, தெரியவருகிறது.
இதன்படி, 2 ட்வீட் பதிவுகளையும் தேட தொடங்கினோம். முதலில், தமிழன்டா(@AlaTwitz) ட்விட்டர் ஐடியில் தகவல் தேடினோம். நீண்ட நேரம் தேடியும் அவர் வெளியிட்ட ட்வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயம், ஐடி உண்மையானதுதான், அதில் தொடர்ச்சியாக, பாஜகவை விமர்சித்து பதிவுகள் வெளியிடப்படுகிறது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
அதேசமயம், இதே தகவலை மற்றொரு ட்வீட்டர் பயனாளரும் பகிர்ந்திருந்ததைக் கண்டோம்.
இதையடுத்து, குறிப்பிட்ட Jeevanand Rajendran என்பவரின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தோம். குறிப்பிட்ட பதிவை கண்டோம்.

அவரது பதிவின் கமெண்ட்களை படிக்கும்போதே, நகைச்சுவைக்காக அவர் பகிர்ந்திருப்பதாகவும், பலர் இதனை உண்மை என நம்பி, பாராட்டியும், விமர்சித்தும் பதிவுகளை வெளியிடுவதாகவும் கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அவரே தனது பதிவுகளை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் உண்மை என நம்பி விமர்சிப்பதையும் குறிப்பிட்டு கமெண்ட் பகிர்ந்துள்ளார்.
சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கும் ரிப்போர்ட் செய்து, கமெண்ட் பகிர்ந்துள்ளதை காண முடிந்தது.

எனவே, நகைச்சுவைக்காக ஒருவர் ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்ந்த பதிவை பாஜக, திமுக ஆதரவாளர்கள் உண்மை என நம்பி, அவரவர் பங்கிற்கு மீம்ஸ் போட்டு கலாய்த்தும், விமர்சித்தும் தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குஜராத்தில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனையா?- நகைச்சுவை பதிவை உண்மை என நம்பியதால் குழப்பம்
Fact Check By: Pankaj IyerResult: Misleading
