கோத்தபயவை கண்டித்து பாடகி யோஹானி பதாகை ஏந்தியதாகப் பரவும் வதந்தி…
‘’இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை கண்டித்து பதாகை ஏந்திய பாடகி யோஹானி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன், அந்நாட்டைச் சேர்ந்த பாடகி யோஹானி பேசுவது போன்ற சில புகைப்படங்கள் மற்றும் கோத்தபயவுக்கு எதிராக யோஹானி பதாகை ஏந்தியது போன்ற ஒரு புகைப்படம் ஆகியவற்றை சேர்த்து பகிரப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) வழியே அனுப்பியிருந்தார்.
இதனைப் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என நாம் பாடகி யோஹானியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (yohanimusic) சென்று தகவல் தேடினோம். அப்போது, அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தைக் கண்டோம். ஆனால், இப்படியான புகைப்படம் எதுவும் காணக் கிடைக்கவில்லை.
Yohani Post Link I Archived Link
எனவே, யோஹானி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை எடுத்து மேற்கண்ட வகையில் எடிட் செய்து, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:கோத்தபயவை கண்டித்து பாடகி யோஹானி பதாகை ஏந்தியதாகப் பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False