கே.ஜே.யேசுதாஸ் பேத்தி தனது திறமையை நிரூபித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கே.ஜே.யேசுதாஸ் பேத்தி தனது திறமையை நிரூபித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.
Tongue twister song in perfect tune rendered so well by Ms.Ameya D/O singer Vijay Yesudoss.
கே ஜே யேசுதாஸ் மகன் விஜய் இயேசுதாசின் மகள் ஆமேயா யேசுதாஸ்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுதொடர்பாக ஏற்கனவே Vijay Yesudas மறுப்பு கூறியிருப்பதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைக் கண்டோம். 

Filmi Beat Malayalam l News 18 Malayalam

அடுத்தப்படியாக, மேற்கண்ட வீடியோவில் பாடும் இளம்பெண், ஆந்திராவைச் சேர்ந்த Srilalitha Gudipati என்பவர் ஆவார். இவருக்கும் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

சிறுவயதில் இருந்தே, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியுப் போன்ற சமூக வலைதளங்களில் Srilalitha அவ்வப்போது பாடல்கள் பாடி, பதிவிடுவது வழக்கம். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவை கடந்த மே மாதம் 11, 2024 அன்று Srilalitha தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கறார். 

Instagram Link l Youtube Link l Facebook Link

இதே வீடியோவை, ஸ்ரீலலிதா அவரது ஃபேஸ்புக், யூடியுப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதனை எடுத்தே பலரும் தற்போது சமூக வலைதளங்களில், கே.ஜே.யேசுதாஸ் பேத்தி என குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இதேபோன்று, யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடலை கடந்த 2019ம் ஆண்டு ஸ்ரீலலிதா, தனது சொந்த குரலில் பாடி, பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த பலரும், ‘இவர் யேசுதாஸின் பேத்தி’ என்று அப்போது வதந்தி பரப்பியதும், நாம்  ஃபேக்ட்செக் வெளியிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

Fact Crescendo Tamil Link 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:கே.ஜே.யேசுதாஸ் பேத்தி தனது திறமையை நிரூபித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False