பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பேத்தி இவரா?

சமூக ஊடகம் சினிமா

‘’பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பேத்தி அமியா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

Rajasekaran Rajagopalan

என்பவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில் சிறுமி ஒருவர் யேசுதாஸின் பிரபலமான ஹரிவராசனம் பக்திப் பாடலை பாடுகிறார். அவரை கே.ஜே.யேசுதாஸ் பேத்தி அமியா என இந்த பதிவை வெளியிட்டவர் கூற, பலரும் அது உண்மை என நம்பி லைக், கமெண்ட், ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
இதன்படி, மேற்கண்ட வீடியோவில் இருப்பவர் கே.ஜே.யேசுதாஸ் பேத்தியா என்ற சந்தேகத்தில் நமக்குத் தெரிந்த மலையாள நண்பர்களிடம் விசாரித்தோம். யேசுதாஸின் பேத்தி 10 வயதிற்குள்ளான ஒருவர் என்றும் இவ்வளவு பெரிய சிறுமியாக இருக்க வாய்ப்பில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து, யேசுதாஸின் உண்மையான பேத்தி பற்றிய ஆதாரத்தை கூகுளில் தேடினோம். அப்போது இதுதொடர்பான வீடியோ மற்றும் செய்தி ஆதாரங்கள் கிடைத்தன. 

Mathrubhumi News LinkAsianet Malayalam Link 

எனவே, கே.ஜே.யேசுதாஸின் உண்மையான பேத்தி அமியா இவர் இல்லை என்பது தெளிவாகிறது. இதையடுத்து, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோவில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அந்த சிறுமி யார் என்ற விவரம் தேடினோம். அப்போது, அவர் ஆந்திராவைச் சேர்ந்த பின்னணி பாடகி Srilalitha Bhamidipati என தெரியவந்தது. 

இதன்படி, ஸ்ரீலலிதா ஆந்திராவைச் சேர்ந்த பாடகி என்பதும், சிறுவயது முதலாகவே மேடை கச்சேரிகளில் பங்கேற்று பிரபலமானவர் என்பதும் தெளிவாகிறது. ஆனால், இவர் யேசுதாஸின் பேத்தி அல்ல. அவர் மேற்கண்ட வீடியோவை, 2019 டிசம்பர் மாதம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் யூடியுப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதன் லிங்கை கீழே இணைத்துள்ளோம். 

Srilalitha Bhamidipati Facebook Link Youtube Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) பின்னணி பாடகி ஒருவரின் வீடியோவை எடுத்து யேசுதாஸின் பேத்தி என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர்.
2) யேசுதாஸின் உண்மையான பேத்தி அமியா வேறொருவர் ஆவார். இதனை உரிய புகைப்படம், வீடியோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பதிவில் தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பேத்தி இவரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False