சிங்கப்பூர் ஹோட்டல் படத்தை குஜராத் மருத்துவமனை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் புகைப்படத்தை, குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்த்த போது, சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றின் புகைப்படம் இருந்தது. நிலைத் தகவலில், “குஜராத் அரசு மருத்துவமனை.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த புகைப்படத்தை ஷங்கர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 2ம் தேதி வெளியிட்டிருந்தார். ஃபேஸ்புக்கில் சிலர் இதையும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

மிகவும் பிரபலமான சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்றின் புகைப்படத்தை குஜராத் அரசு மருத்துவமனை என்று குறிப்பிட்டு சிலர் பகிர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவை வெளியிட்டவர் உண்மை என்று கருதி வெளியிட்டாரா அல்லது நையாண்டிக்காக வெளியிட்டாரா என்று தெரியவில்லை. 

ஃபேஸ்புக்கில் தேடிய போது அண்ணாமலை ஆர்மி என்ற ட்விட்டர் பக்கம் இந்த பதிவை முதலில் வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டு, பா.ஜ.க மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்களை விமர்சித்து சிலர் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. ட்விட்டரில் அந்த பதிவை தேடி எடுத்தோம்.

https://twitter.com/KarthikGnath420/status/1576216799418339328

Archive

அண்ணாமலை ஆர்மி முகப்பு பக்கத்தில் தேசியவாதி என்று குறிப்பிட்டு இருந்தது. சில பதிவுகள் அண்ணாமலையைப் புகழ்ந்தது போல இருந்தது. சில பதிவுகள் நையாண்டிக்காக வெளியிட்டது போல இருந்தது. எனவே, மீண்டும் ஒரு முறை முகப்பு பக்கத்தைப் பார்த்தோம். “மூளை சாதிக்காததை முழங்கால் சாதிக்கும் – வீர் சாவர்க்கர்” என்று படம் இருந்தது. மேலும், தமிழ்நாட்டின் ஆட்சியைக் கலைக்க பைடன் சிக்னல் என்று எல்லாம் ட்வீட் இருக்கவே இது ட்ரோல் ட்விட்டர் ஐடி என்பது தெரிந்தது. 

Archive

யாரோ ஒருவர் அண்ணாமலையை ட்ரோல் செய்ய ட்விட்டரில் ஐடி உருவாக்கி, வதந்தி பரப்பி வருவது தெரிந்தது. அது தெரியாமல் சிலர் இந்த பதிவு உண்மை என்று நம்பி விமர்சித்து வருவது தெரிந்தது. 

சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) என்ற ஹோட்டலின் இந்த புகைப்படத்தை யார் எடுத்தது என்று தேடிப் பார்த்தோம். பலரும் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. Architecture & Design என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் @bennytgh என்ற ட்விட்டர் ஐடி கொண்டவரால் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நபரின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களைக் கண்டுபிடித்தோம். அதில் அவர் இந்த படத்தைப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

குஜராத் அரசு மருத்துவமனை என்று பகிரப்படும் படம் சிங்கப்பூரைச் சார்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நையாண்டி செய்யும் வகையில் போலியாக உருவாக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவு வெளியாகி உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சிங்கப்பூரில் உள்ள பிரபல மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டல் படத்தை குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனை என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சிங்கப்பூர் ஹோட்டல் படத்தை குஜராத் மருத்துவமனை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False