‘’சண்டிகாரில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கும் முஸ்லீம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ Today at Kurali toll plaza at Chandighar😡 They want everything function to their whims & fancies., illiterate bunches,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனுடன் முஸ்லிம் ஆண்கள் லாரி ஒன்றில் வந்து, சுங்கச்சாவடியில் ரகளை செய்வது போன்ற காட்சியுடன் கூடிய வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோவில் ஒரு ஃபிரேமை எடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது வங்கதேசம் நாட்டில் நிகழ்ந்த ஒன்று, என தெரியவந்தது.

இதன்படி, வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள Dhaka Elevated Expressway-ல் செயல்படும் (Kuril Toll Plaza) சுங்கச்சாவடியில்தான் சமீபத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த சாலையின் விதிமுறைகள்படி, திறந்த நிலையில் உள்ள வாகனங்கள், அதன் மேலே பயணிக்கக்கூடாது. ஆனால், இவ்வாறு பலரை ஏற்றிக் கொண்டு குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்கு லாரி ஒன்று வந்ததால், அதனை மேற்கொண்டு செல்ல அனுமதிப்பதா, வேண்டாமா என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் விவாதம் மேற்கொண்டனர்.

அதேசமயம், சுங்கக் கட்டணம் செலுத்திய பிறகும் தங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்துவது தவறு, என்று கூறிய பயணிகள், இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முஸ்லீம்தான்…

ஆனால், இதற்கும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள kurali toll plaza-க்கும் எந்த தொடர்பும் இல்லை.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

BDNews24 l SOMOY TV l Dhaka Tribune

எனவே, வங்கதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்றை எடுத்து, இந்தியாவில் முஸ்லீம்கள் அராஜகம் என்று கூறி சமூக வலைதளங்களில் பலரும் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   சண்டிகாரில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கும் முஸ்லீம்கள்!
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE