FACT CHECK: பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தினாரா ஸ்டாலின்?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 ரூபாய் குறைத்துவிட்டு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை தமிழ்நாடு அரசு அதிகரித்துவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Stalin 2.png

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உயர்த்தப்பட்ட அபராத தொகை சென்னையில் அமலுக்கு வந்தது என்று தினமலரில் வெளியான செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், “இதுக்கு நீ பெட்ரோல் டீசல் 3 ரூபா கம்மிப் பண்ணாமலேயே இருந்திருக்கலாம்ப்பா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை அமாவாச – உண்மையை உரக்க சொல்பவன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஆகஸ்ட் 16ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. ஆனால் டீசலுக்கு குறைக்கப்படவில்லை. இது கூட அறியாமல் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 குறைக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, தவறும் செய்யும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை அதிகரித்ததாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

2021 ஆகஸ்ட் 15, 16ம் தேதிகளில் தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கான அபராதம் உயர்த்தப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எந்த ஒரு ஊடகத்திலும் அப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள செய்தியில் ஆகஸ்ட் 16 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், வருடத்தைக் குறிப்பிடவில்லை. எனவே, பழைய செய்தியை கொண்டு வந்து புதிது போல பகிர்ந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

Stalin 3.png

ஃபேஸ்புக்கில் இது தொடர்பாக தேடினோம். அப்போது இதே பதிவை 2019ம் ஆண்டில் இருந்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. இதன் மூலம் 2019ம் ஆண்டு வெளியான பதிவை இப்போது வெளியிட்டிருப்பது உறுதியானது.

Stalin 4.png

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தினமலரில் இது தொடர்பான செய்தி 2019ம் ஆண்டு வெளியானதா என்று பார்த்தோம். அப்போது 2019 ஆகஸ்ட் 15ம் தேதி “உயர்த்தப்பட்ட அபராத தொகை சென்னையில் அமலுக்கு வந்தது” என்று தலைப்பட்டு செய்தி வெளியாகி இருப்பது தெரியவந்தது. மேலும், தினமலர் 2019 செப்டம்பர் 1 அன்று வெளியிட்டிருந்த செய்தியில் “போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் உயர்ந்தது! தமிழகத்தில் அரசாணை வெளியிடாததால் குழப்பம்” என்று குறிப்பிட்டிருந்தது. 

Stalin 5.png

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

தொடர்ந்து தேடிய போது 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அபராதம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்போதைய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்த செய்தியும் கிடைத்தது. அதில், “தமிழகத்தில் தான் அதிகமாக புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்ததாகச் செய்திகள் தெரிவித்தன.

Stalin 6.png

அசல் பதிவைக் காண: minnambalam.com I Archive 1 I maalaimalar.com I Archive 2

நம்முடைய ஆய்வில்,

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அபராத கட்டண அட்டவணை புகைப்படம் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தினமலர் நாளிதழில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி “உயர்த்தப்பட்ட அபராத தொகை சென்னையில் அமலுக்கு வந்தது” என்று செய்தி வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2019ம் ஆண்டிலேயே நாடு முழுவதும் புதிய மோட்டர் வாகன சட்டத் திருத்தத்தின் படி அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்துவிட்டது என்பது உறுதியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்பனையில் 3 ரூபாயைக் குறைத்துவிட்டு, வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தைத் தமிழக அரசு பல மடங்கு உயர்த்திவிட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2019ம் ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டதை தற்போது தமிழ்நாடு அரசு உயர்த்தியது போன்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தினாரா ஸ்டாலின்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •