
‘’திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’திமுகவினர் அநாகரீகமானவர்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கண்டனம்!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன், Sun News பெயரில் பகிரப்படும் ஒரு வதந்தி, என்று தெரியவந்தது.
ஆம், இவ்வாறு எந்த செய்தியும் சன் நியூஸ் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
கூடுதல் ஆதாரத்திற்காக, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பிலும் விளக்கம் கேட்டு, உறுதி செய்துள்ளோம்.
இவற்றின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்தாரா?
Written By: Pankaj IyerResult: False
