FactCheck: எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் கூறியதாகப் பரவும் வதந்தி

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் விமர்சனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, அங்கேயும் இதனை பலர் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் முதலில், நாம் நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவிடம் விளக்கம் கேட்டோம். ‘’இந்த டெம்ப்ளேட் பயன்படுத்தி நாங்கள் தற்போது செய்தி வெளியிடுவதே இல்லை. எங்களது பழைய செய்தியை எடுத்து, யாரோ வேண்டுமென்றே எடிட் செய்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர்,’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கே.டி.ராகவன் அவர்களையும் தொடர்பு கொண்டு, இவ்வாறு ஏதேனும் பேசியது உண்டா, என்று கேட்டோம். ‘’என் பெயரில் பகிரப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. இப்படி நான் எங்கேயும் பேசவில்லை,’’ என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படும் வதந்தியே, மேலே நாம் கண்ட தகவல் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் கூறியதாகப் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply