‘’சினிமாப் பாடல்களுக்கு நடனமாடிய சீமான்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோக்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

இதேபோன்று மேலும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ உண்மையில், ஆடியோ எடிட் செய்யப்பட்டதாகும். சீமான், சமீபத்தில் நடைபெற்ற சங்கத் தமிழிசை விழாவில் பங்கேற்று, விருந்தினர்களுடன் நடனமாடிய காட்சி இது. அப்போது இசைக்கப்பட்ட பின்னணி இசை வேறொன்றாகும். அதற்கான உண்மை வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஒலிக்கும் பின்னணி இசையை எடிட் செய்து, வேறொரு இசைக் கலவையை சேர்த்து அவரவர் விருப்பம்போல சமூக வலைதளங்களில் சீமான் பற்றி வதந்த பரப்பி வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:சினிமாப் பாடல்களுக்கு சீமான் நடனமாடினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False