“பெரியார், அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை” என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியான வீடியோவில் தவறில்லை என்று  அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திண்டுக்கல் சீனிவாசன் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பெரியார் அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை. முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிட்ட வீடியோவில் தவறு ஒன்றும் இல்லை; திமுக தான் இதை அரசியல் செய்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடந்த முருகன் சமய மாநாட்டில் பெரியார், அண்ணா புகைப்படங்களுடன் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்களை மேடையில் வைத்துக் கொண்டு திராவிடம் மற்றும் திராவிடத் தலைவர்கள் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக முன்னணி தலைவர்கள் எல்லாம் இந்த விவகாரம் தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வீடியோவில் தவறில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்க தந்தி டிவி வெளியிட்டது போலவே உள்ளது. எனவே, இதை தந்தி டிவி வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் அப்படி கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, நியூஸ் கார்டு போலியாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். ஜூன் 23, 2025 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.

ஒருவேளை நியூஸ் கார்டை வெளியிட்டுவிட்ட அகற்றியிருப்பார்களா என்ற சந்தேகத்தில் இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இதை பார்த்துவிட்டு இது போலியானது என்று உறுதி செய்தார். 

பெரியார், அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக எந்த செய்தியும் இல்லை. தந்தி டிவியும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெரியார் அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டை நாங்கள் வௌியிடவில்லை என்று தந்தி டிவி உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“பெரியார், அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை” என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

Written By: Chendur Pandian  

Result: False

Leave a Reply