கிறிஸ்தவன் கண்டுபிடித்த மின்சாரத்தை இந்துக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கிறிஸ்தவன் கண்டுபிடித்த மின்சாரத்தை இந்துக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட்கள் அனைத்துமே இந்த தகவல் உண்மை போல சித்தரிக்க முயற்சிப்பதைக் கண்டோம்.

அர்ஜூன் சம்பத் பெயரில் பகிரப்படும் மேற்கண்ட தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் அர்ஜூன் சம்பத் தரப்பில் விசாரித்தபோது, ‘’திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி பெயரில் வேண்டுமென்றே ஏராளமான போலி ஐடி.,க்கள் தொடங்கப்பட்டு, இப்படி நாள்தோறும் புதுப்புது வதந்திகள் பகிரப்படுகின்றன. இந்த பதிவுகளை யாரும் உண்மை என நம்ப வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டனர்.

அவர்கள் கூறுவது போல, நாமும் இப்படியான வதந்திகள் பற்றி அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்துள்ளோம். அவற்றை கீழே இணைத்துள்ளோம்.

Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2 I Fact Crescendo Tamil Link 3

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும். ஆம், இதனை முதலில் ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஐடியின் பெயர் kaaji makkal katchi என்று உள்ளது.

அந்த ஐடியில் பகிரப்பட்ட மேற்கண்ட பதிவையும் இணைத்துள்ளோம்.

Tweet Link I Archived Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் அர்ஜூன் சம்பத்தை கேலி செய்யும் நோக்கில் பகிரப்பட்டு, தற்போது உண்மை போல மற்றவர்களால் பகிரப்பட்டு வரும் ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கிறிஸ்தவன் கண்டுபிடித்த மின்சாரத்தை இந்துக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply