‘சீமானுக்கு நெஞ்சு வலி’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?  

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’சீமானுக்கு நெஞ்சு வலி’’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’சீமானுக்கு நெஞ்சு வலி! நெஞ்சு வலி காரணமாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’சீமான் நலமுடன் உள்ளார்; இது வேண்டுமென்றே அவரை பிடிக்காதவர்கள் பரப்பும் வதந்தி,’’ என்றனர். 

அடுத்தப்படியாக, இதுபற்றி தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசினோம். அவர், ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி. இவ்வாறு நாங்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை,’’ என்று தெரிவித்தார்.  

எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் சீமான் பற்றி சிலர் இவ்வாறு வதந்தி பரப்பி வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘சீமானுக்கு நெஞ்சு வலி’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

Written By: Fact Crescendo Team 

Result: False