ஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி?

Coronavirus அரசியல் இந்தியா

‘’நிடா அம்பானி ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.500 பணம் பெற்றுக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim Link 1Archived Link 
Facebook Claim Link 2Archived Link

இதனை பலரும் நிடா அம்பானி வெளியிட்ட உண்மையான ட்விட்டர் பதிவு என்றே நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்: 

மத்திய அரசு கோவிட் 19 ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படும் இந்திய பெண்களுக்கு உதவும் வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும் என்று அறிவித்தது. 

Economictimes.com Link

இத்தகைய சூழலில்தான், நிடா அம்பானிக்கும் ஜன் தன் யோஜனாவின்கீழ் பண உதவி கிடைத்துள்ளது என்று கூறி தகவல் பரவி வருகிறது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள ஸ்கிரின்ஷாட்டை உற்று கவனித்தாலே ஒரு விசயம் நன்கு புரியும். அதனை எழுதிய நபர் உண்மையில் நிடா அம்பானி கிடையாது. யாரோ வேண்டுமென்றே ஃபேக் ஐடி தொடங்கி இப்படி பதிவிட்டுள்ளனர். 

உண்மையில், நிடா அம்பானி இப்படி எந்த பதிவும் ட்விட்டரில் வெளியிடவில்லை. அவரது ட்விட்டர் ஐடி (@Nita_Ambani) ஆக்டிவாக இல்லை.  

அதேசமயம், மேற்கண்ட சர்ச்சை பதிவை வெளியிட்ட நபரின் ட்விட்டர் ஐடி லிங்க் கிடைத்தது. அதன் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Nita Fake Twitter ID LinkArchived Link

நிடா அம்பானி இவ்வாறு எங்கேயும் கூறவில்லை. ஆனால், அவரது பெயரை பயன்படுத்தி அவ்வப்போது இதுபோன்ற வதந்திகளை சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபற்றி ஏற்கனவே நாமும் ஒருமுறை உண்மை கண்டறியும் சோதனை நடத்தியிருக்கிறோம். 

FactCrescendo Tamil Link 

முடிவு: 

உரிய ஆதாரங்களின்படி நிடா அம்பானி பற்றி பகிரப்படும் மேற்கண்ட தகவல் தவறான ஒன்று என நிரூபித்துள்ளோம். எந்த தகவலை பகிர்ந்தாலும் ஒருமுறை நன்கு படித்து, அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டு, மற்றவர்களுக்கு பகிரும்படி நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •