‘’ கேரளா- நிலச்சரிவில் தனது குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட நாய்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களே காப்பாற்ற அருகில் உள்ள நபர்களே உதவிக்கு அழைக்கும் தாய் நாய்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள சூரல்மலை, முண்டகை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் துண்டாடப்பட்டுள்ளன. 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இந்த நிகழ்வு உலகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The Hindu Link l Dinamalar Link l News18 Tamil Link

இதையொட்டி சமூக வலைதளங்களில் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாக பகிரப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ‘நாய் மண்ணில் சிக்கித்தவிக்கும்’ வீடியோவும் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் NEWS FLARE என்ற ஊடகத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளதைக் கண்டோம்.

NEWS FLARE என்ற பெயரை வைத்து நாம் தகவல் தேடினோம். அப்போது நமக்கு அந்த ஊடகம் கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட ஒரு வீடியோ கிடைத்தது.

அதில், கேரள மாநிலம் பாலக்காடு அருகே 2021 அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட தாய் நாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வீடியோவை மற்ற ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

The News Minute Link l News Capture 24 Link l New Indian Express Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட நாய் மற்றும் குட்டிகள்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Missing Context