6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டு பற்றிய பாடம்- உண்மை என்ன?

‘’6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். 01/12/2022 அன்று பதிவிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ஆறாம் வகுப்பு கணிதப் பாடத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் மூன்றாம் பருவத்துக்கான கணிதப் பாடத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது….,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
கமெண்ட் பகுதியில், பலரும் இதனை தற்போதைய திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி, விமர்சிப்பதைக் காண முடிகிறது.

இதேபோல, தமிழ்நாடு பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த பாடத்திட்டத்திற்கு திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் சுப வீரபாண்டியன் ஆகியோர்தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். அந்த பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் தமிழக அரசின் தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ஏற்கனவே இந்த புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளங்களில் பரவிய ஒன்றாகும். குறித்த பாடப்புத்தகம், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பாக அச்சடிக்கப்பட்டதாகும். 2018ல் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதன் திருத்திய பதிப்பு 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக 2021ம் ஆண்டுதான், நியமிக்கப்பட்டார். எனவே, அதற்கும் முன்பாகவே அச்சடிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அவரை குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல,’’ என்றனர்.
நாமும் இதன்பேரில் தொடர்ந்து தேடியபோது, திண்டுக்கல் ஐ.லியோனி கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.
இதேபோல, சுப.வீரபாண்டியன், 2021ல்தான் தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Thecommunemag.com link I hindu tamil link
இதுதவிர, தமிழ்நாடு அரசு சார்பாக, இணையதளத்திலேயே பள்ளிப் பாடப்புத்தகங்களின் இலவச பிடிஎஃப் தொகுதிகள் தரப்படுகின்றன. கீழ்க்கண்ட லிங்க் சென்றால், அவற்றை நாமே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
https://textbookcorp.tn.gov.in/textbook1.php
இந்த லிங்க் சென்று, 6ம் வகுப்புக்கான சமச்ச கல்வ III Term கணிதப் பாடப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து, பார்வையிட்டோம். அதில், சீட்டுக்கட்டு விளையடுவது தொடர்பான பாடம் உள்ளதைக் கண்டோம்.

இதற்கான லிங்க் 6th Term III Maths PDF Link
மேலும், புத்தகத்தின் ஆரம்பத்திலேயே முதல் பதிப்பு, திருத்திய பதிப்பு எப்போது வெளியானது என்ற விவரமும் இடம்பெற்றுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,
திண்டுக்கல் லியோனி 2021ம் ஆண்டுதான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கும், மேற்கண்ட 6ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கும் சம்பந்தமில்லை. இது 2018-19 காலத்திலேயே அச்சடிக்கப்பட்ட புத்தகமாகும். திமுக ஆட்சிக்கு வந்தது 2021 சட்டமன்ற தேத்லுக்குப் பிறகுதான். அதற்கு முன்பாக, அதிமுக ஆட்சி நடைபெற்றது.
எனவே, அதிமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த விசயத்திற்கு, திமுக.,வை தொடர்புபடுத்தி தற்போது சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வது முற்றிலும் தவறாகும். மேலும், சீட்டுக்கட்டு விளையாடுவது தொடர்பான பாடம் probability தலைப்பின் கீழ் நடத்தப்படுவதாகும். ஏற்கனவே, அந்த தலைப்பில், பகடைக்காய் விளையாடுவது பற்றிய பாடங்கள் கூட நிறைய உள்ளன. அது சரியான பாடம் என்பதுபோலவும், சீட்டுக்கட்டு மட்டுமே தவறான பாடம் என்பது போலவும் சிலர் கருத்து பகிர்வது ஏற்புடையதல்ல.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாடுவது பற்றிய பாடம்- உண்மை என்ன?
Fact Check By: Fact Crescendo TeamResult: MISLEADING
