மீண்டும் பரப்புரைக்கு தயாராகும் விஜய் வாகனம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘’மீண்டும் பரப்புரைக்கு தயாராகும் விஜய் வாகனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ மீண்டும் பரப்புரைக்கு தயாராகும் விஜய் வாகனம்…
வந்துட்டான்
வந்துட்டான்..//,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Claim Link 4       

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது AI முறையில் தயாரிக்கப்பட்ட படம் என்றும், உண்மையானதல்ல என்றும் தெரியவந்தது. 

இதன்படி, மேற்கண்ட புகைப்படத்தில் தவெக பிரசார வாகனத்தை கிரீஸ் ஊற்றி துடைக்கிறார்கள். இதில் உள்ள மனிதர்கள் எந்த உணர்ச்சியும் இன்றி உள்ளனர். மேலும், அந்தரத்தில் மிதக்கின்றனர். மேலும், விஜய் எருமை மாடு மேலே வருவது போன்ற படமும் உண்மையல்ல..

அடுத்தப்படியாக, wasitai மற்றும் hivemoderation ஆகிய AI சரிபார்ப்பு இணையதளங்களில் குறிப்பிட்ட படங்களை ஆய்வு செய்து, உண்மையானதல்ல, என்பதை உறுதி செய்தோம்.

இதேபோன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மற்றொரு படமும் AI முறையில் தயாரிக்கப்பட்டதுதான். அந்த படத்தின் மீதுள்ள வாட்டர் மார்க், (MADE IN ANIMOTICA) நமது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. 

இறுதியாக, தவெக., தலைமை அலுவலகத்திலும் பேசி, மேற்கண்ட படங்கள் உண்மையல்ல, என்று உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படங்கள், AI முறையில் தயாரிக்கப்பட்டவை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:மீண்டும் பரப்புரைக்கு தயாராகும் விஜய் வாகனம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False