ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன்; கிரண் பேடி வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன் என்று கூறி கிரண் பேடி வெளியிட்ட ட்வீட் ஒன்று மிக வைரலாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

இது உண்மையா, பொய்யா என்ற குழப்பத்தில் பலரும் இந்த பதிவை ஷேர் செய்வதைக் காண முடிந்தது.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்த பதிவு வைரலாகப் பரவிய நிலையில், பலராலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது.

திரைப்படம் ஒன்றில் வரும் கிராஃபிக்ஸ் காட்சி என்று கூட தெரியாமல் வதந்தியை உண்மை போல பகிரும் இவர் எப்படி ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார், எனக் கேட்டு விமர்சிக்க தொடங்கினர்.

சிலர் ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு சூரியனில் இருந்து ஓம் எனும் ஒலி வெளிவருவதாகக் குறிப்பிட்டு கிரண் பேடி வெளியிட்டிருந்த ட்வீட்டை பகிர்ந்தும் விமர்சித்திருந்தனர்.

இதுபற்றி நாமும் அப்போது ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

Fact Crescendo Tamil Article Link

இந்த வரிசையில் கிரண் பேடி சற்றும் யோசிக்காமல் வெளியிட்ட ட்வீட்தான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதும்.

பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக கேப்ஷனை மட்டும் சிறிது மாற்றி, அதே வீடியோவுடன் சேர்த்து மற்றொரு பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

ஆனாலும், புதிய கேப்ஷனில் கூட, ‘இது கிராஃபிக்ஸ் வீடியோ, தெரியாமல் பகிர்ந்துவிட்டேன்’ என அவர் உண்மையை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. பட்டும் படாமல் வெவ்வேறு வார்த்தை ஜாலங்களில் கேப்ஷனை எடிட் செய்துள்ளார்.

Kiran Bedi New Tweet Link I Archived Link

ஆனால், இதனையும் பலர் விமர்சித்தே வருகின்றனர்.

மற்றொரு விமர்சன பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மையில், இதனை National Geographic டிவி பதிவு செய்யவில்லை. 5 Headed Shark Attack என்ற திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட காட்சியாகும்.

குறிப்பிட்ட படத்தின் டிரெய்லரில் மேற்கண்ட ஹெலிகாப்டர் காட்சியை நீங்கள் காணலாம். 

எனவே, கிரண் பேடி வெளியிட்ட ட்வீட் உண்மையில் ஒரு சினிமா படத்தின் கிராஃபிக்ஸ் காட்சி என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன்; கிரண் பேடி வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: False