திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

அரசியல் தமிழகம்

‘‘திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

ராஜன் காந்தி என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு உண்மையா என்ற சந்தேகத்தில் fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி, ஆய்வு செய்தோம். அப்போது, இது போலியான ஒன்றுதான் என்பதற்கான விவரம் கிடைத்தது. 

இதுதவிர, சம்பந்தப்பட்ட நியூஸ் 7 தொலைக்காட்சியின் ஆன்லைன் பிரிவு நிர்வாகியை தொடர்புகொண்டு விசாரித்தோம். அப்போது, ‘’இப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. இது வழக்கம்போல, நியூஸ் 7 தொலைக்காட்சியின் பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள போலி நியூஸ் கார்டு,’’ என்று தெரிவித்தனர்.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False