சூரியனில் இருந்து வெளிவரும் ஓம் சத்தம்: வைரல் வீடியோ உண்மையா?

அறிவியல் சமூக ஊடகம் | Social

‘’சூரியனில் இருந்து ஓம் சத்தம் வெளிவருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Video Link 

சனாதன தர்மம் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜனவரி 5, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சூரியனில் இருந்து விதவிதமான சத்தங்கள் வெளிவருவதாக ஏற்கனவே ஃபேஸ்புக்கில் வதந்திகள் பரவின. அவை பற்றி நாம் உண்மை கண்டறியும் சோதனை செய்து, தவறு என்று ஏற்கனவே நிரூபித்துள்ளோம். அதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். அதில், சூரியனில் இருந்து ஓம் சத்தம் வருவதாக, நாசா கண்டறிந்துள்ளது என்று கூறி ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார். இது பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிரண் பேடியே இதனை பகிர்ந்ததை தொடர்ந்து, பலரும் இப்படி உண்மையாகவே நடந்துள்ளதாக நினைத்து, மேற்கண்ட வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Archived Link

இதைத்தொடர்ந்து, மீண்டும் Fact Crescendo சார்பாக, விரிவான ஆய்வு செய்து, இதன் உண்மைத்தன்மை பற்றி விளக்க கட்டுரை ஒன்றை பிரத்யேகமாக நாம் சமீபத்தில் வெளியிட்டோம். 

Fact Crescendo Story Link 

உண்மையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் உள்ளதுபோல ஓம் சத்தம் வெளிவருவதாகக் கூறி நாசா எங்கேயும் வீடியோ வெளியிடவில்லை. நாசா வெளியிட்ட வீடியோவில், மிக மெல்லிய சப்தம் மட்டுமே வரக்கூடியதைக் கேட்க முடிகிறது. ஆனால், அது ஓம் என்ற சத்தம் இல்லை. நாசா வெளியிட்ட உண்மையான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

நாசா வெளியிட்ட வீடியோவை எடுத்து அதன் பின்னணியில் ஓம் என்ற சத்தம் வரும்படி எடிட்டிங் செய்து பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில் வரும் ஓம் சத்தம் வேறொரு வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அதற்கான வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது. 

இதன்படி, நாசா வீடியோவையும், ஓம் உச்சரிப்பு தொடர்பான வீடியோவையும் ஒன்றாக இணைத்து, சூரியனில் இருந்து ஓம் சத்தம் வெளிவருவதாகக் கூறி வதந்தி பகிர்ந்துள்ளனர். இதனை உண்மை என நம்பி கிரண் பேடி முதல் சாமானிய ஃபேஸ்புக் வாசகர் வரை அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த வீடியோ பதிவில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுளளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:சூரியனில் இருந்து வெளிவரும் ஓம் சத்தம்: வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False