
‘‘‘இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கண்டுபிடித்த பைக் பெல்ட் ஏர்பேக்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Tweet Claim Link l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை நாம் ரிவர்ஸ் இமேஜ் செய்து, விவரம் தேடியபோது இது Forteon – AirbagForBike 2019 Campaign என்ற தலைப்பில் ஏற்கனவே யூடியுப்பில் பகிரப்பட்டுள்ள வீடியோ என்று தெரியவந்தது.
இந்த வீடியோ Marketing Video என்றே குறிப்பிடப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, Indiegogo என்ற நிறுவனம் இந்த வீடியோவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தயாரித்து வெளியிட்டிருப்பதாக, தெரிகிறது. Forteon – Airbag For Bike என்ற தலைப்பில் இந்த பிரசாரத்தை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, புதுப்புது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு அமெரிக்க ஸ்டார்ட் அப் கம்பெனிதான் இது என்று தெரியவருகிறது.

எனவே, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது பிரசாரப் பணிகளுக்காக, தயாரித்த வீடியோ ஒன்றை எடுத்து, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சாதனை என்று கூறி சிலர் வதந்தி பரப்புவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கண்டுபிடித்த பைக் ஏர்பேக் என்று பரவும் வதந்தி…
Fact Check By: Fact Crescendo TeamResult: False
