Rapid Fact Check: பாகிஸ்தானில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமயம் சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

இந்தியாவில் பரப்புவதற்காக பாகிஸ்தான் அச்சடித்து வைத்திருந்த போலியான இந்திய கரன்சி நோட்டுக்கள் கண்டெய்னர் கண்டெய்னராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஏராளமான கண்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றுக்குள் இருந்து பொருட்களை வெளியே வீசுகின்றனர். நிலைத் தகவலில், “இப்ப தெரியுதா மோடி எண் பண மதிப்பிழப்பை உடனடியாக அமல்படுத்தினார் என்று பாகிஸ்தானில் கண்டனர் கண்டெய்னராக இந்தியகரன்சி நோட்டுக்களை பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் புழக்கத்திற்கு விடுவதற்காக வைத்திருந்த கள்ளப்பணம் இதை அச்சு அடிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் ரிசர்வ் வங்கி பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பா சிதம்பரம் காங்கிரஸுக்குகாங்கிரசுக்கு இஸ்லாமிய ஓட்டுக்காக மிஷினை பாகிஸ்தானுக்கு கொடுத்தார் இதன் விளைவு பாகிஸ்தான் இந்தியாவை வேரோடு சாய்க்க வேண்டும் பொருளாதார குழப்பம் வர வேண்டும் இந்தியார் ஆக உடைய வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டது.

இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட நரேந்திர மோடி உடனடியாக பணமதிப்பிழப்பை அறிவித்தார் உடனடியாக பா சிதம்பரம் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மீண்டும் அதே பணத்தை நாங்கள் புழக்கத்திற்கு விடுவோம் என்று அறிவித்தார் நல்ல வேளை தெய்வம் காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர்த்த வில்லை அப்படி காங்கிரசை ஆட்சியில் மூர்த்தி இருந்தால் நமது எதிர்கால தலைமுறை மண்ணோடு மண்ணாகி இருக்கும் 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் இந்தியாவிற்கு கள்ளப் பணத்தை அனுப்பி பாகிஸ்தான் நல்ல நாடாகவும் இந்திய கெட்ட நாடகம் சித்தரித்துக் காட்டிக் கொண்டிருந்தது.

இந்தியா பிச்சைக்காரன் நாடு என்று பாகிஸ்தான் குரல் கொடுத்துக் கொண்டிருந்ததுதற்போது பண மதிப்பிழப்பிற்கு பின்பு பாகிஸ்தான் பிச்சைக்காரன் நாடாக ஆனதற்கான காரணம் தங்களுக்கு சொல்லி புரிய வேண்டியதில்லை இந்த கட்சியை பார்த்தாலே புரியும் இது ஒரு பகுதி தான் இன்னும் எவ்வளவோ பகுதிகள் பணக்கட்டுகள் இந்தியாவிற்கு வராமல் ராணுவ வீரர்கள் பார்த்துக் கொண்டார்கள் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியது இதனால் தீவிரவாதிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

இந்தியா ஆன்மீக பூமி இந்தியாவிற்கு எதிராக யார் சதி செய்தாலும் அவர்கள் மண்ணோடு மண்ணாகி விடுவார்கள் என்பதற்கு பாகிஸ்தான் முதல் கட்ட உதாரணம் இலங்கை சைனா அடுத்தடுத்த நிலையில் உள்ளன இலங்கை இந்தியாவுடைய உதவியை நாடியதால் தப்பித்தது வாழ்க பாரத மணித்திரு நாடு நாம் அதன் புதல்வர்கள் சுப்பிரமணிய பாரதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Sundararajan Arunachalakani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழிக்க பாகிஸ்தான் நாடு, போலி இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து கண்டெய்னரில் வைத்திருந்ததாகப் பகிரப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ப.சிதம்பரம்தான் அச்சடிக்கும் இயந்திரத்தை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அறிந்துதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நரேந்திர மோடி அறிவித்தார் என்று நீண்ட கதை வசனம் எழுதப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற ப.சிதம்பரம் என்று தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் நரேந்திர மோடி அரசால் அப்படி எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. ப.சிதம்பரம் அச்சடிக்கும் இயந்திரத்தை விற்று தவறு செய்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் யாரும் வழங்கவில்லை. இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரம் எதுவும் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்படவில்லை, ப.சிதம்பரம் அப்படி எதையும் வழங்கியதாகச் செய்தி இல்லை என்று ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். எனவே, இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்புகளை எல்லாம் அரசு நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தன என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. ஆனால், அந்த தகவல் போலியானது என்று ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். அரபு நாடு ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது போன்று தெரிந்தது. எனவே, பழைய கட்டுரையை பார்வையிட்டோம். அதில் இருக்கும் வீடியோவும் இதுவும் ஒன்று என்பது தெளிவானது.

அசல் பதிவைக் காண: alarabiya.net I Archive

2016ம் ஆண்டு சௌதி அரேபியாவில் கெட்டுப்போன கோழி இறைச்சிகளைப் பாலைவனத்தில் கொட்டி அப்புறப்படுத்திய வீடியோ இது என்பது நமக்குத் தெரியவந்தது. இதற்கான வீடியோ மற்றும் செய்தி ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன. இதன் மூலம் சௌதி அரேபியாவில் கெட்டுப்போன கோழி இறைச்சிகளை அப்புறப்படுத்தும் வீடியோவை எடுத்து, பாகிஸ்தான் அரசு அச்சடித்து வைத்திருந்த கள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களைப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அழித்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட போலியான இந்திய ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அழிக்கப்படும் காட்சி என்று பரவும் வீடியோ சௌதி அரேபியாவில் கெட்டுப்போன கோழி இறைச்சியை அழிக்கும் வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:Rapid Fact Check: பாகிஸ்தானில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False