‘’ அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமனம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில நாட்கள் முன்பாக, ‘’தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் – பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது பாஜக மேலிடம்.’’, என்று ஒரு வதந்தி பகிரப்பட்டது. நாமும் அதுபற்றி ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

Fact Crescendo Tamil Link

இதன் தொடர்ச்சியாக பகிரப்படும் மற்றொரு வதந்தியே நாம் தற்போது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டும்… இவ்வாறு தந்தி டிவி எந்த செய்தியும் வெளியிடவில்லை. நாம் இதுதொடர்பாக, அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

மேலும், பாஜக ஐ.டி., பிரிவு தரப்பிலும் பேசி உறுதி செய்துள்ளோம். வேண்டுமென்றே அண்ணாமலையை கேலி செய்யும் நோக்கில் மேற்கண்ட வகையில் சிலர் வதந்தி பரப்பி வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டாரா?

Written By: Fact Crescendo Team

Result: False