அதிமுக.,வில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’காயத்ரி ரகுராம் அதிமுக.,வில் இருந்து அதிரடி நீக்கம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு..
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்

செல்வி காயத்திரி ரகுராம் (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ‘இது ஒரு போலியான அறிக்கை’ என்று தெரியவந்தது. இதுதொடர்பாக, நாம் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி நிர்மல் குமார் தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

அடுத்தப்படியாக, காயத்ரி ரகுராம் இதுபற்றி மறுப்பு கூறியுள்ளதையும் கண்டோம். அதனையும் ஆதாரத்திற்காக, கீழே இணைத்துள்ளோம். 

அந்த பதிவில் அவர்,’’என்னா டா 420மலை நீ வார்ரூமிடம் அழ செய்தாய். அய்யா எடப்பாடியார் கடிதத் தலைப்பை தவறாகப் பயன்படுத்தி உங்களுக்காக அவர்கள் ஆபாசம் குற்றம் செய்ய தொடங்கினர். இது உங்கள் ஆலோசனையுடன், வழிகாட்டுதலின் படி யா? இது குற்றம் என்று அவர்களுக்குத் தெரியாதா? உன் வீரம் என்னை நோக்கி மட்டுமே, திமுகவுடன் இல்லை. புல் தடுக்கி பயில்வான் செயல். என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நீ விரும்புகிறீர்கள். அது நடக்காது. உங்கள் வார்ரூம் ஜோக்கர்களுக்காக உங்களுக்கு நீங்களே சவுக்கடி கொடுக்க வேண்டும், நான் அதை தலைகீழாக செய்வேன், பார்த்து டா கோமாளி. நான் ஜோக்கர்களுக்கு பயப்படவில்லை என்று சொல்லுங்கள். உங்கள் சில்லறை யோசனையால் எந்த பயனும் இல்லை,’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அதிமுக.,வில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டாரா?

Written By: Pankaj Iyer  

Result: False