அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் பாராளுமன்றம் முழுவதும் அம்பேத்கர் 🔥😎,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்பேரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்திய அளவில் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

Times of India l The Wire l Indian Express

இத்தகைய சூழலில், அம்பேத்கர் படத்தை அனைத்து எம்.பி.,க்களும் நாடாளுமன்றத்தில் தங்களது இருக்கை முன்பாக வைத்து, அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறி, மேற்கண்டவாறு திமுக, காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். 

ஆனால், இந்த புகைப்படத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, கர்நாடகா சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட படம். ஆம், கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்குதான், அமித் ஷாவை கண்டிக்கும் வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, இவ்வாறு அம்பேத்கர் புகைப்படம் வைத்து, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

Hindustan Times l Times of India

எனவே, கர்நாடகா சட்டமன்றத்தில் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்து, நாடாளுமன்றத்தில் நடந்ததாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISSING CONTEXT