
‘’நான் ஒரு கிறிஸ்டியன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் பெருமையாக ஒப்புக் கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் ஒரு கிறிஸ்துவன்தான் – உதயநிதி பெருமிதம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Ilaya Bharatham-KGF என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை இந்த X பதிவில் மறுபகிர்வு செய்துள்ளனர்.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில், SPC பெந்தகோஸ்தே சபைகள் சார்பாக, கோவையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அதில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசுகையில், ‘’ சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நானும் ஒரு கிறிஸ்தவன்தான் என்று பெருமையாக சொன்னேன். உடனே உங்களுக்கு தெரியும் சங்கிகள் பலருக்கும் பயங்கர வயிற்றெரிச்சல். நான் இன்றைக்கு மீண்டும் உங்கள் முன்னால் சொல்கிறேன். அதை சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.
நீங்கள் என்னை கிறிஸ்டியன் என்று நினைத்தால் நான் கிறிஸ்டியன்; நீங்கள் என்னை முஸ்லீம் என்று நினைத்தான் நான் முஸ்லீம்; நீங்கள் என்னை இந்து என்று நினைத்தால் நான் இந்து. ஏனென்றால், நான் அனைவருக்கும் பொதுவானவன். எப்பொழுதுமே அப்படித்தான் இருப்போம். எல்லா மதங்களுக்கும் அடிப்படையே அன்புதான். எல்லார் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத்தான் எல்லா மதங்களும் சொல்லித் தருகின்றன. ஆனால், அதே மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள்தான் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவார்கள்,’’ என்று உதயநிதி கூறியிருந்தார்.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளன. அவற்றையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
Sun News l Puthiyathalaimurai TV l News 18 Tamil
ஆனால், இந்த விவரங்களை மறைத்துவிட்டு, உதயநிதி தனது உண்மையான மதம் கிறிஸ்தவம் என்று ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிட்டு, பாஜக ஆதரவாளர்கள், வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று நமக்கு தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:நான் ஒரு கிறிஸ்டியன் என்று உதயநிதி ஸ்டாலின் ஒப்புக் கொண்டாரா?
Written By: Pankaj IyerResult: Misleading
