
‘’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பட்ட வீடியோவில், 22.05.2018 என்றும் FCI Roundana என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்மூலமாக, கடந்த 2018ம் ஆண்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, எளிதல் உறுதி செய்ய முடிகிறது.

அடுத்தப்படியாக, இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என விவரம் தேடினோம். அதில் உள்ள FCI Roundana என்ற கீவேர்டை பயன்படுத்தி தேடியபோது, தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோ இது என்று தெரியவந்தது.
இதுபற்றிய வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுளளது.
அத்துடன், இதுதொடர்பான ஊடகங்களில் வெளியான செய்தி, போலீஸ் விளக்கம் உள்ளிட்டவற்றுடன் கீழே ஆதாரம் தரப்பட்டுளளது.
TheNewsMinute Link
எனவே, 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் வீடியோ பதிவை எடுத்து, தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
மேற்கண்ட ட்வீட்டை வெளியிட்டுள்ள சவுதா மணி, பாஜக.,வில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

இவர், ஏற்கனவே சமூக வலைதளங்களில் இவ்வாறு பொய்யான செய்திகளை பரப்பிய புகாரின்பேல் கைது செய்யப்பட்டு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து தவறான தகவல் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அந்த வரிசையில் வேண்டுமென்றே இவர் திமுக ஆட்சி மீது குற்றஞ்சாட்டும் வகையில் பழைய வீடியோ ஒன்றை எடுத்து, தற்போது ட்வீட் பகிர்ந்துள்ளார்.
முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோவை திமுக ஆட்சியில் நிகழ்ந்தது போல பரப்புவதால் சர்ச்சை!
Fact Check By: Fact Crescendo TeamResult: MlSLEADlNG
