
பிரதமர் மோடி கழிப்பறை சென்றுவிட்டு, 37 புகைப்படங்கள் எடுத்து விளம்பரம் செய்கிறார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த படத்தை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.
இதே படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதையும் கண்டோம்.
உண்மை அறிவோம்:
இந்த புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தபோது, பிரதமர் மோடி கைகழுவும் இடத்தின் அருகே சில படிக்கட்டுகள் இருப்பதைக் கண்டோம். எனவே, இது கழிவறையாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அத்துடன், அவரது தலையில் ஒரு துணி கட்டப்பட்டுள்ளதையும், அவரது காலில் காலணிகள் எதுவும் இல்லாததையும் பார்க்க முடிகிறது. எனவே, இது அவர் டாய்லெட் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என ஆரம்பத்திலேயே நமக்கு தெளிவாகிறது.
இவற்றின் அடிப்படையில் இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி விவரம் தேடினோம். அப்போது, இது கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது என விவரம் கிடைத்தது.
இதுதொடர்பான கூடுதல் செய்தி ஆதாரம் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காணக் கிடைக்கிறது.
narendramodi.in link
இதுதவிர, Narendra Modi அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கத்திலும் இதுபற்றிய வீடியோ இடம்பெற்றுள்ளது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, மோடி 2020ல் டெல்லியல் உள்ள ஒரு குருத்துவாரா சென்ற புகைப்படத்தை தற்போது எடுத்து வேண்டுமென்றே அவர் டாய்லெட் சென்றுவிட்டு, அதைக்கூட புகைப்படம் எடுத்து அவர் விளம்பரம் செய்துகொள்வதாகக் குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பிரதமர் மோடி டாய்லெட் சென்றபோது 37 புகைப்படங்கள் எடுத்தாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
