
‘’உத்தரப் பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கிய யோகி ஆதித்யநாத் மகராஜ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ *உத்தரப்பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்!*
*உடனடியாக சிகிச்சை!*
*நாட்பட்ட முதுகு வலி, இடுப்பு வலி, கால் வலி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற••••*
*பிரபல மருத்துவர்கள்:*
*யோகி ஆதித்யநாத் ஜி மகராஜ்!!*🤷♂️🌹,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், போராட்டம் செய்யும் முஸ்லீம் மக்களை, போலீசார் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2019ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின் தொடர்பான வீடியோ என்று தெரியவந்தது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
News Nation l Live Hindustan l ANI News l Hindustan Times
அடுத்தப்படியாக, குறிப்பிட்ட வீடியோவில் வரும் தெரு, கட்டிடங்கள் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக வைத்து, இது கோரக்பூர்தான் என்பதை உறுதி செய்ய முடியுமா என முயற்சி செய்தோம்.
இதே கட்டிடம், நமக்குக் கிடைத்த செய்தி ஆதாரங்களிலும் சற்று தெளிவாகக் காண முடிகிறது.
இதன்படி, Google Earth உதவியுடன் தகவல் தேடியபோது, இந்த கட்டிடம் கோரக்பூரில் உள்ள Nakhas Chowk – Kotwali Road என்ற இடத்தில், நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதாக, நமக்கு விவரம் கிடைத்தது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2019ம் ஆண்டு கோரக்பூரில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வன்முறைக் காட்சி ஒன்றை எடுத்து, தற்போது மறுபகிர்வு செய்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்களை அடக்கிய யோகி ஆதித்யநாத் என்ற தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: MISSING CONTEXT
