டெல்லியில் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார் என்று பரவும் செய்தி உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘டெல்லியில் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் * பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் நாளை மாலை 4 மணிக்கு நேரம் ஒதுக்கீடு’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Archived Link        

தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ‘’இது கடந்த 2023ம் ஆண்டு வெளியான நியூஸ் கார்டு,’’ என்று தெரியவந்தது. 

இதன்படி கடந்த 27.02.2023 தேதியிட்டு, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை எடுத்து, தற்போதைய அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Dailythanthi Link 

கூடுதல் ஆதாரத்திற்காக, தந்தி டிவி ஆசிரியர் குழு மற்றும் திமுக ஐடி பிரிவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு 2023ம் ஆண்டு வெளியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:டெல்லியில் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply