‘இஸ்ரேலின் இன்றைய நிலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?

False சமூகம் சார்ந்தவை I Social சர்வதேசம் | International

ஈரான் தாக்குதலில் கட்டிடங்கள் உடைந்து, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் இருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கட்டிடங்கள் எல்லாம் இடிந்த நிலையில் ஒரு நகரமே சிதைந்து போய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன்னை அழிக்க யாருமில்லை என்று நினைத்த ஆணவக்காரனின் இன்றைய நிலை #இன்றைய_இஸ்ரேல்_நிலவரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் நாட்டின் உயர் தலைவர் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேலின் நிலை என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

இந்த வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2023ம் ஆண்டிலிருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில், துருக்கியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ துருக்கி நாட்டில் உள்ள பசார்சிக் மாவட்டத்தின் கஹ்ரமன்மராஸ் (Pazarcık district of Kahramanmaraş) என்ற இடத்தில் எடுக்கப்பட்டதாக 2023ம் ஆண்டு வெளியான பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. துருக்கி நாட்டில் உள்ள ஊடகங்களிலும் கூட இந்த வீடியோ வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

இதன் மூலம் துருக்கி நாட்டில் 2023ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு தொடர்பான வீடியோவை எடுத்து, இஸ்ரேலின் தற்போதைய நிலை என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2023ல் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் வீடியோவை இஸ்ரேலின் இன்றைய நிலை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Result Stamp

Title: ‘இஸ்ரேலின் இன்றைய நிலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply