மு.க.ஸ்டாலின் ஆட்சி முடிவுற்றதை தூய்மைப் பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினரா?  

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘மு.க.ஸ்டாலின் ஆட்சி முடிவுற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடிய தூய்மைப் பணியாளர்கள்,’’ என்று கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தூய்மை பணியாளர்கள் கொண்டாட்டம். திருட்டு திமுகவின் ஆட்சி முடியப்போறதை பட்டாசு வெடித்து கொண்டாடிய தூய்மை பணியாளர்கள். அதிர்ச்சியில் கொத்தடிமைகள் பதற்றத்தில் ஸ்டாலின்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது Sun News சேனல் கடந்த 2025ம் ஆண்டு வெளியிட்ட நியூஸ் கார்டு என்று, தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2025ம் ஆண்டு  அக்டோபர் 20 அன்று சென்னை மாதவரம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடியதாக சன் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. 

உண்மையான நியூஸ் கார்டில் “கொளுத்துடா பட்டாச… போடுறா வெடிய! தூய்மை பணியாளர்களின் தீபாவளி கொண்டாட்டம்,’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதனை வேண்டுமென்றே எடிட் செய்து, திமுகவுக்கு எதிராக, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.  

Sun News Link 1 l Link 2 l Link 3

கூடுதல் ஆதாரத்திற்காக, Sun News ஆசிரியர் குழுவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: மு.க.ஸ்டாலின் ஆட்சி முடிவுற்றதை தூய்மைப் பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply