பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது என்று பகிரப்படும் வதந்தி…
‘’ பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டில் ABP Nadu ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளது. இதில், உள்ளதைப் போல அவர்கள் செய்தி எதுவும் வெளியிட்டுள்ளனரா என்ற சந்தேகத்தில் விவரம் தேடினோம். அப்போது, உண்மையான செய்தி கிடைத்தது. அந்த செய்தியில், ‘’பொய் செய்தி பரப்பியதாக சரவண பிரசாத் (52) என்பவர் கைது!,’’ என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
மேலும், ‘’பாலியல் புகாரில் பாஜக நிர்வாகி சரவண பிரசாத் கைது என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்றும் ABP Nadu ஊடகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
உண்மையான நியூஸ் கார்டையும், நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது என்று பகிரப்படும் வதந்தி…
Written By: Fact Crescendo TeamResult: ALTERED