தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி விற்பனையில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு வீடியோவை அதிமுக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive

ரேஷன் கடையில் அரிசியை எடை போடும் போது எடைக் கல்லை வைத்து ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

இதே வீடியோவை எக்ஸ் தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். நிலைத் தகவலில், “பல எலைட் மக்கள் ரேஷன் பொருட்களே வாங்குறதில்ல அந்த அரிசியை கூட இவங்க எடுத்துக்கலாம். ஆனால் அதையும் மீறி விடியா திமுக ஸ்டாலின் ஆட்சியில் அடிதட்டு மக்களோட வயித்துல அடிக்கிறாங்க… அப்ப இதுதான் அந்த ஸ்டாலின் மாடலா ?!!? ரேஷன் கடையில் எடை போடுபவரின் கையில் பாருங்கள். இடம்: குளச்சல் இரும்பிலி ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முறைகேடுகள் எல்லா நிலையிலும் எல்லா ஆட்சிக் காலத்திலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதாக அ.தி.மு.க-வினர் அதிக அளவில் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இந்த வீடியோவை ஒருவர் 2017ம் ஆண்டு சிந்தி மொழியில் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது. எனவே, இந்த சம்பவம் சமீபத்தில் தி.மு.க ஆட்சியில் நடந்தது என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். வீடியோவின் வெவ்வேறு காட்சிகளை கூகுள் லென்ஸில் பதிவேற்றி தேடினோம். அப்போது 2017ம் ஆண்டில் கோயமுத்தூரில் உள்ள ரேஷன் கடையில் இந்த முறைகேடு நடந்தது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 2019ம் ஆண்டு அக்டோபரில் இந்த வீடியோவை வைத்து ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது. 

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fvettupulii%2Fvideos%2F1874634342811744%2F&show_text=false&width=261&t=0″ width=”261″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடையில் ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இது எங்கு எடுக்கப்பட்டது என்பதை உறுதியாக கண்டறிய முடியவில்லை. ஆனால், வீடியோவில் (0.15) ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பதைக் காண முடிகிறது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு 2017ம் ஆண்டில் இருந்து தான் வழங்கப்பட்டு வருகிறது. 2011 முதல் 2021 மே மாதம் வரை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிதான் நடந்தது. எனவே, இந்த வீடியோ அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ரேஷன் முறைகேடு தொடர்பானது என்பது தெளிவாகிறது. 

தங்கள் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வீடியோவை எடுத்து தி.மு.க ஆட்சியில் நடந்ததாக அ.தி.மு.க ஆதரவாளர்கள் தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2017ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரேஷன் கடையில் ஊழியல் ஒருவர் செய்த முறைகேட்டின் வீடியோவை 2025ல் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False