சென்னையில் திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழுந்ததா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

சென்னையில் திமுக ஆட்சியில் கான்கிரீட்டால் நிறுவப்பட்ட வடிகால் பாதை இடிந்து விழுந்த பரிதாப காட்சி என்று குறிப்பிடப்பட்டு, பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இளைஞர் ஒருவர் நடந்து செல்லும்போது திடீரென கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழும் காட்சிகள் கொண்ட சிசிடிவி பதிவு ஒன்றை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதன் மேலே, ‘’சென்னையில் போடப்பட்ட விடியலில் வடிகால் பாலம்,’’ என்று தலைப்பிட்டு ஷேர் செய்துள்ளனர்.

இதனை பலரும் திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தியே கமெண்ட் கூட பகிர்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் தகவல் தேடியபோது இது, ஆந்திராவில் நிகழ்ந்தது என்று தெரியவந்தது.

முதலில், சில ஆங்கில ஊடகங்கள் இதுபற்றி நகைச்சுவையாக தலைப்பிட்டு செய்திகள் பகிர்ந்திருந்தன.

TimesNow Link I NDTV Link

ஆனால், சிலர் வேண்டுமென்றே இதனை திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி தகவல் பகிரவே, இதுபற்றி தமிழ் ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டன. அந்த செய்திகளில் இது ஆந்திராவில் நிகழ்ந்தது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டும் உள்ளது. பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

கடையின் பெயர்ப்பலகையில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

இறுதியாக, இந்த வீடியோ பற்றி திமுக.,வின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, ஆந்திராவில் நிகழ்ந்த வீடியோ காட்சியை எடுத்து, திமுக அரசுடன் இணைத்து வதந்தி பரப்புகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:சென்னையில் திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழுந்ததா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading

Leave a Reply