
‘’தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது கதறி அழுத அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவுகள் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இதேபோல, யோகி ஆதித்யநாத் அழுவதைப் போன்ற ஒரு வீடியோவையும் பகிர்ந்து, காஷ்மீர் ஃபைல்ஸ் பார்க்கும்போது அவர் அழுதார் என்று தகவல் பரப்புவதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து The Kashmir Files என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை இந்தியா முழுக்க, பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் நேரில் சென்று தியேட்டரில் பார்வையிடுவதாக, செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில்தான், மேற்கண்ட வகையில் இப்படத்தை பார்க்கும்போது யோகி ஆதித்யநாத், அத்வானி ஆகியோர் கதறி அழுததாக தகவல் பரப்பப்படுகிறது.
ஆனால், இவை வெவ்வேறு நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்டவை. அத்வானி அழுவதைப் போல இருக்கும் வீடியோ கடந்த 2020ம் ஆண்டு Shikara என்ற படத்தை தியேட்டரில் அவர் பார்த்தபோது எடுக்கப்பட்டதாகும்.
இதுபற்றி அப்போதே ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.
இதேபோல, யோகி ஆதித்யநாத் அழுவதைப் போன்ற வீடியோ ஒரு அரசு நிகழ்வின்போது எடுக்கப்பட்டதாகும்.
இதுபற்றி ஊடகங்களில் ஏற்கனவே வெளியான செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
வெவ்வேறு நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ பதிவுகளை எடுத்து, புதியது போல தகவல் பகிர்ந்து, வாசகர்களை குழப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத் கதறி அழுதனரா?
Fact Check By: Pankaj IyerResult: False
