மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் வதந்தி…
‘’மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link I Archived Link
இதே செய்தியை ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Asianet News Tamil FB Post I Article Link I Archived Link
உண்மை அறிவோம்:
கடந்த ஜனவரி மாதம், சென்னை குயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கோயில் கட்டிட நிலத்தில் மீன் சந்தை கட்டிக் கொடுக்கப்படுவதாக வெளியான செய்திக்கு, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த செய்தியை முதலில் வெளியிட்ட தினமலர் நாளிதழ், கூடவே அவர்களது கமெண்ட்டையும் சேர்த்து நடுப்பக்கத்தில் விமர்சனமாக வெளியிட்டிருந்தது. இதுபற்றி அவர்களது இணையதளத்தில் வெளியான பதிவை கீழே இணைத்துள்ளோம்.
இதில், கீழே இருப்பது தினமலர் ஆசிரியர் குழுவின் சொந்த கருத்தாகும். அண்ணாமலை இப்படி கூறவில்லை. ஆனால், இதனை தவறாக அர்த்தப்படுத்தி சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘’மீன் சாப்பிட்டுவிட்டு, கோயிலுக்குச் செல்பவர்கள் இந்துக்கள் இல்லை,’’ என்று அண்ணாமலை கூறியதாக தகவல் பரப்பினர்.
இதனை பார்த்து, மாலைமலர் ஊடகம் செய்தி வெளியிட்டுவிட்டு, எதிர்ப்பு கிளம்பவே, அதனை பிறகு நீக்கிவிட்டது.
இதேபோல, ஜூனியர் விகடன் ஊடகமும் விளக்கம் அளித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதுபற்றி பாஜக ஐ.டி., பிரிவு வட்டாரத்திலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
ஆனால், இந்த உண்மைத்தன்மையை அறியாமல் ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகம் இந்த செய்தியை பகிர்ந்திருக்கிறது. இதேபோல, மாலைமலர் தனது செய்தியை டெலிட் செய்துவிட்டாலும், அதன் ஸ்கிரின்ஷாட் பலரால் உண்மை போல பகிரப்படுகிறது.
அண்ணாமலை பேசாத ஒன்றை உண்மைச் செய்தி போலவே கற்பனையாகவே நீண்ட கதை எழுதி இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False