
‘‘அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மற்றும் திரிஷா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்-திரிஷா.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது AI முறையில் தயாரிக்கப்பட்டது, என்று, தெரியவந்தது.

இதில், @gnvishnu என்ற லோகோ இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் தகவல் தேடியபோது, gnvishnu என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே புகைப்படம் பகிரப்பட்டுள்ளதைக் கண்டோம்.

இது AI முறையில் தயாரிக்கப்பட்ட புகைப்படம் என்றும் அந்த பதிவில் Disclaimer குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தனது சுய விவரத்தில், Storyteller | Creator என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் ஆதாரத்திற்காக, Sightengine, hivemoderation போன்ற இணையதளங்கள் உதவியுடன் இது AI புகைப்படம் என்பதை, உறுதிப்படுத்தியுள்ளோம்.

அடுத்தப்படியாக, அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றதாக, வெளியான செய்திகளை பார்த்தோம். அவற்றில் விஜய் – திரிஷா ஒன்றாக பங்கேற்றது போன்று எதுவும் கூறப்படவில்லை.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Kumudam l Puthiyathalaimurai TV l News 18
இறுதியாக, தவெக தலைமைக் கழகம் தரப்பிலும் பேசி, மேற்கண்ட புகைப்படம் தவறானது, என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் AI முறையில் தயாரிக்கப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


