
‘’தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ எதே ஸ்டாலின் பழமொழிகளா???
சங்கிலி பருப்பு தாலி அறுப்பு , பூனைமேல் மதில்மேல், கொல்முதல்நெல் நெல்முதல்கொள்
போன்ற பழமொழிகள் அடங்கிய தொகுப்பு போல
சரி,
2500 + 1500 = 5000
86 + 9 = 97 போன்ற கணக்கு பாட புத்தகம் எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க???? ” என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் புத்தகம் ஒன்றின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அட்டைப் படத்தில், ‘ தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள். தொகுப்பு: நீலகிரி மா. பாலமுருகன். உதவி. இரா. அன்வர் கான்‘ என்றும் எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தில் உள்ளது போன்று ஏதேனும் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளதா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
ஆம், தளபதி மு.க.ஸ்டாலினின் எழுச்சிமிகு உரைகள், என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியான புத்தகம் ஒன்றின் புகைப்படத்தை எடுத்து, இவ்வாறு வேண்டுமென்றே எடிட் செய்து வதந்தி பரப்புகிறார்கள்.
இதுதொடர்பாக, நாம் திமுக ஐ.டி. பிரிவு தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
கூடுதல் ஆதாரத்திற்காக, உண்மையான புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
