சீரியல் நடிகை ஷாபனா தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, புடவை அணிந்தாரா?  

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘சீரியல் நடிகை ஷாபனா தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, புடவை அணிந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தமிழ்நாடு famous சீரியல் நடிகை Shabana நேரடியாக தளபதி விஜய் அண்ணா விக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ❤👏,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, Shabana அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உண்மையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தவெக சின்னம் கொண்ட புடவை எதுவும் காணப்படவில்லை. 

இதன்மூலமாக, தவெக ஆதரவாளர்கள் எடிட் செய்த புகைப்படத்தை, பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

கூடுதல் ஆதாரத்திற்காக, Shabana தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: சீரியல் நடிகை ஷாபனா தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, புடவை அணிந்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply